அமைப்பு:
ஆத்தூர் நகராட்சி 4-10-1886ல் ஊராட்சியாக தோற்றுவிக்கப்பட்டு 31-03-1965 வரை பேரூராட்சியாக இயங்கியது. பின்னர் இந்த நகரம் 1-4-1965ல் அரசானை எண்: 194 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நாள் 17-1-1965-ன் படி 3ம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது. நகராட்சியின் வருவாய் உயர்வினாலும் மக்கள் பெருக்கத்தாலும் இந்த நகரம் அரசானை எண்: 194 நாள் 10-4-1970-ன் படி 16-4-1970 முதல் 2-ம் நிலை நகராட்சியாகவும், அரசானை எண்: 28 நாள் 4-1-1975ன் படி 1-4-1975 முதல், முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டு இதுவரை இயங்கி வருகிறது. நகராட்சி துவக்கத்தில் 10 வார்டுகளைக் கொண்ட இந்நகரம், 1969ல் 18 வார்டுகளும், 1986 முதல் 28 வார்டுகளும், தற்பொழுது 33 வார்டுகள் உள்ளன.
மொத்த வார்டுகள் | 33 |
பெண் உறுப்பினர்கள் | 11 |
ஆண் உறுப்பனர்கள் | 22 |
மக்கள் தொகை | 57,550 |
பெண்கள் | 25,839 |
ஆண்கள் | 25,711 |
மொத்தப் பரப்பளவு | 27.62 ச.கி.மீ |
எல்லை:
கிழக்கில் துலுக்கானுர், அம்மம்பாளையம், கல்லா நத்தம் பஞ்சாயத்துகளும், மேற்கில் நரசிங்கபுரம், தென்னங்குடிபாளையம் பஞ்சாயத்துகளும், வடக்கில் பட்டுமேடு பாரஸ்ட் மலையும், தெற்கில் பைத்தூர் பஞ்சாயத்தும் இதன் எல்லைகள். ஆத்தூர், முல்லைவாடி, நாராயணபுரம், சந்திரகி¡¢ ஆகியவை நகா¢ல் உள்ளடங்கியுள்ளது. இதன் பரப்பு 27.62 ச.கி.மீ.
|
|
|