நகரைப் பழாடிக்கும் சில தனியார் பள்ளிகள்
சினிமா துறையினர் விட்டுவிட்ட ( அல்லது குறைத்து கொண்ட) வால்போஸ்டர் மற்றும் பேனர் கலாசாரத்தை சில தனியார் பள்ளிகள் தொடங்கி உள்ளன. நகரின் முக்கிய பகுதியிலும் நகராட்சிக்கு சொந்தமான இடத்திலும், மரத்தின் மீதும் தங்கள் கவர்சிகரமான வாசகங்களை கொண்ட பேனர்களை வைக்கிறார்கள். இதனால் பெற்றோர்களுக்கு உங்கள் மீது உயர்ந்த எண்ணம் ஏற்படாது என்பதை உணருங்கள். விளம்பரம் செய்யாமல் மிக நல்ல முறையில் நடைபெறும் பல தனியார் பள்ளிகள் நகரில் உள்ளன. உள்ளூர் தழிழ் நாளிதலிலும், டிவி சேனலிலும் உங்கள் பள்ளியின் சிறப்பை வெளியிடலாம். சட்டத்தை மதித்து தினியார் இடத்தில் பேனர்களை வைக்கும் பள்ளிகளும் உண்டு. மற்வர்களும் இதை பின்பற்றலாம்.
பல உள்ளூர் தலைவர்களாலும், அதிகரிகளாலும் உருவாக்கப்பட்ட பகுதிகளை பாழடிப்பதை நிறுத்துங்கள். முன்னால் மாவட்ட ஆட்சியர் திரு.இராதகிருஷ்ணனும், காலம் சென்ற முன்னால் நகரமன்ற தலைவர் திரு.செங்குட்டுவேல் அவர்களும் நகரை சீர்படுத்த எடுத்த முயற்சிகளை பாழடிக்காதீர்கள்.
சில தனியார் பள்ளிகள் மரத்தின் கிளைகளை வெட்டி தங்கள் பேனரை வைக்கிறார்கள். அந்த மரத்தை வளர்க்க எந்தனை பேர் சிரமம் எடுத்து கொண்டார்கள் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாதவர்களிடம், பெற்றோர்கள் எதிர்பார்ப்பது கிடைக்காது.
எதிர் வரும் ஆண்டுகளிலும் இது தொடருமானால் இவர்களை நீதி மன்றதை எதிர் நோக்க செய்வதில் தவறு இல்லை. கல்வி நிறுவனம் என்பது ஒரு வழிபாட்டு தளத்திற்கு ஒப்பானது என்பதை உணரவேண்டும்.
தொடரும்...........................
விரைவில் புகைப்படங்கள்