குடியிருப்பு பகுதியா? அல்லது வர்த்தகவளாகமாக?
இயற்கையாக ஒரு பகுதியில் உள்ள காற்று, நீர் மற்றும் வெளிச்சத்திற்கு எந்தவித குந்தகமும் ஏற்படாமல் மக்கள் குடியிருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அரசாங்கத்தால் எற்படுத்தப்பட்டதுதான், அங்கீகரிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதி. அங்கீகரிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளை தங்கள் சுய நலத்திற்கு தவறாக பயன்படுத்த சட்டத்தில் யாருக்கும் இடமில்லை.
குடியிருப்பு பகுதியான காந்திநகர், வணிகவளாகமாக மாறும் அவல நிலை உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆத்தூர் நகர மக்கள் குடியிருப்புகாக, ஆத்தூர் காந்திநகர் கூட்டுறவு சங்கத்தால் உருவாக்கப்பட்டதுதான் காந்திநகர் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதியாகும். காலம் சென்ற M.ஆறுமுகம், Dr.V.ராஜமாணிக்கம், சிட்டாறுமுகம் ஆகியோரின் பெரும் முயற்சியால் காந்தி நகர் ஒரு முன் உதரண(Rool Model) குடியிருப்புப்பகுதியாக இருந்தது. காலப்போக்கில் ஒரு சிலர் செய்கின்ற தவறுகளால் இது மெல்ல மெல்ல வர்த்தக வளாகமாக மாறிவருகிறது. ஒரு தனிநபர் பொதுநல வழக்கு தொடர்ந்தால் தற்பொழுது டில்லியில் ஏற்பட்டுள்ள நிலையே இங்கும் ஏற்படும் [குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட 40,000 கடைகளுக்கு சீல் வைக்கும் படி உச்ச நீதிமன்றம் ஆணையிடுள்ளது, மற்றும் சட்டத்திற்கு புறம்பாக கோடைக்கானல், சென்னை முதலிய இடங்களில் கட்டப்பட்ட கட்டிடத்தின் நிலையை அறிவீர்கள்] வர்த்தக நோக்கில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், சட்ட திட்டங்களை நன்கு தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது. தங்கள் சுயநலத்திற்கு அண்டை வீட்டாருக்கு நிரந்தர தொல்லையும், மன உளைச்சளையும் கொடுக்கிறோம் என்பதையும், அண்டை வீட்டாரின் பிறப்புரிமையான அகபுறத்தன்மை(Privacy), காற்று மற்றும் வெளிச்சத்திற்கு தடையக இருக்கிறோம் என்பதை மனபூர்வமக உணர வேண்டாமா? படிக்காதவர்களை விட படித்தவர்கள் உண்மைகளை மறைத்து சில சமயங்களில் அனுமதி பெற்றுவிடுகிறர்கள். அவ்வாறு அனுமதி பெற்றாலும், நீதி மன்றத்திற்கு அந்த அனுமதியை தள்ளுபடி செய்யும் அதிகாரம் உள்ளது. சிலர் வர்த்தகத்தை மீறி தொழிற்கூடங்களுக்கு கட்டிடத்தைப் பயன்படுத்துகிறார்கள். மாசுகட்டுப்பாடு ஆணையத்திடம் அனுமதிப்பெற்று இருந்தாலும், உண்மைகளை அறியப்படும்போது உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி நீக்கப்படலாம்.
நீங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள நிலத்தடி நீரை அதிக ஆழத்தில் இருந்து எடுத்து, அதிக அளவில் வர்தகப்பயன்பாட்டிற்கு பயன்படுத்தும்போது, அண்டை வீட்டார்களுக்கு நிலத்தடி நீர் இல்லாமல் போய்விடும் என்பதை உணருங்கள். அச்சமயத்தில் அண்டை வீட்டார் நீதிமன்றம் செல்ல நேரிடும். அப்பொழுது உங்கள் நிலை என்ன? மற்றும் சிலர் சுற்றுபுற சுவர் மீது கட்டிடத்தை எழுப்புகிறார்கள். அவ்வாறே எல்லோரும் வீடு கட்டினால் எவ்வாறு இருக்கும் என்று சிறிது கற்பனை செய்து பாருங்கள். சிலரின் கட்டிடம் நகராட்சி கழிவுநீர் வாய்கள் மீது உள்ளது. ஒவ்வொருவரும் இவ்வாறு செய்தால் கடைத்தெருவிற்கும் குடியிருப்பு பகுதிக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடாதா?
தாய்பத்திரத்தை (Parental deed) படித்தவர்களுக்கு விவரம் தெரியும். காலப்போக்கில் பத்திரங்கள் மாறும்போது விவரங்கள் மறைக்கப்படுகிறது அல்லது மறக்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் சட்டத்தை மதித்து, நாமும் வாழவேண்டும், சமுதாயமும் அமைதியாக வாழவேண்டும் என்ற உயர்ந்த பண்பாட்டிற்கு நம்மை தயர் செய்து கொள்ளவேண்டும்.