தெரு நாய்

மனிதனால் கைவிடப்பட்ட நாய்க்கு "தெரு நாய்" என்று பெயர்.

    நாய் கடவுளின் படைப்பிலேயே விசுவாசம், பாசம் என்ற வார்தைக்கு எடுத்து காட்டாக விளங்கும் ஓர் உன்னதமான உயிரினம். மனிதனிடம் முதல் முதலாக நட்பு கொண்ட ஓர் உயிரினம். கற்காலம் முதல் கொண்டே மனிதனுக்கு சேவகனாக, நண்பனாக இருந்து வந்துள்ளது. அடித்தாலும், அனைத்தாலும், உணவு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் தன் எஜமானின் வருகைக்கு ஏங்கி தவிக்கும் ஓர் உண்ணத உயிர். ஒரு சில நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு நீங்கள் வீடு திரும்பும்போது அது அடையும் சந்தோஷத்தை வார்த்தைகளால் கூற இயலாது. அதனால் தான் இந்து மதம் நாய்யை பைரவனாக வழிபடுகிறது. எத்தனையோ நாய்கள் தன் எஜமானின் மறைவுக்கபப் பின் சரியாக உணவு கொள்ளாமல் மறைந்து விடுகிறது.  இதற்கு ஜப்பானில் இருந்து ஆத்தூர் வரை பல உண்மை நிகழ்வுகளை கூறலாம். நாயுடன் பழகும் குழந்தைகளுக்கு அன்பு, பாசம், இரக்க குணம் அதிகம் இருப்பதை நன்கு உணரலாம். நானும் நாய் வளர்கிறேன் என்று சித்திரவதை செய்யும் கொடிய உள்ளம் படைத்த மனிதர்களைப் பார்க்கத்தான் செய்கிறோம். இவர்களை முதலில் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். வளர்ப்பு பிராணிகளிடம் அன்பு காட்ட தெரியாதவன் ஒரு பண்பட்ட மனிதனாக இருக்க முடியாது. நாய்களை தெருவில் விஷ ஊசிபோட்டு கொள்வதும்  (நடுத்தெருவில் குழந்தைகள் முன்னிலையில் விஷ ஊசியைப்போட்டு அதை துடிதுடிக்க சாகடிப்பது எந்த விதத்தில் சரி என்று ஏற்றுக்கொள்வது), தெருவுக்கு தெரு கோழி கடை, மீன் கடை, ஆட்டு இறைச்சிக் கடை என்று இருந்தால், நம் குழந்தைகளின் மனது பெரிதும் பாதிக்கப்பட்டு நாளடைவில்  ஓர் ஈவு, இரக்கமற்ற ஓர் மனிதனாக உருவாக காரணமாக அமையும். ஓர் மென்பொருள் துறையில் வேலை செய்யும் ஓர் பொறியாளரின் உள்ளங்கையையும், கிணறு வெட்டும் தொழிலாளியின் உள்ளங்கையையும் சோதியுங்கள். மனிதனின் மணமும் அவ்வாரே, வாழும் சூழ் நிலைக்கு ஏற்ப அது மாறுபட  வாய்ப்புள்ளது.

    அரசு கால் நடை மருத்துவமனையில் வெறிநாய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இருந்தும் அதைனை ஒழுங்காக பயன்படுத்துவது இல்லை. ஒரு சில நாய்க்கு வெறிபிடித்து விட்டால் ஊரில் உள்ள எல்லா நாய்களையும் கொண்றுவிடுவதா? ஒரு யானைக்கு மதம் பிடித்து விட்டால் ஊரில் உள்ள எல்லா யானைகளையும் கொண்றுவிடுகிறோமா? சேலம் மாநகராட்சி எடுத்த முடிவு பாராட்ட படவேண்டிய ஒன்று. வளர்ந்த பண்பாட்டிற்கு ஒரு எடுத்து காட்டு. (தற்போது சேலம் நகரின் தெருக்களில் திரியும் எல்ல நாய்களுக்கும் குடும்ப காட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது). ஒரு அரசாங்கம் மனித நேயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

    தெரு நாய்கள் என்று ஓர் இனம் உள்ளது போலும், அது பூமியிலோ அல்லது மரத்திலிருத்தோ தோன்றியது போல் பேசுவது வேதனைக்குரிய ஒன்று. பொறுப்பற்ற மனிதர்களால் உருவாகும் ஓர் நாய் இனம். ஓர் உண்மை நிகழ்வை இங்கு சொல்ல விரும்புகிறேன். சுமார் 15 வருடங்களுக்கு முன் எனது மிக நெருங்கிய நண்பர் பிடிவாதம் செய்து ஒரு பெமரோனியன் நாய்க்குட்டியை என்னிடம் வாங்கிச் சென்றார். நானும் பல நிபந்தனைகளுடன் தான் தந்தேன். சில மாதங்கள் கழித்து ஒரு நண்பரை காண அவருடைய கிராமத்திற்குச் சென்றேன். அங்கு ஒரு பெமரோனியன் குட்டி வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. அது என் மனதை ஏனோ நெருடியது. பிறகு அவரிடம் விசாரித்த போது என்னுடைய நண்பர் அவருக்கு கொடுத்ததாக கூறினார். (என் நண்பரால் வளர்க்க முடியவில்லை என்பதால் அதை அவரிடம் கொடுத்துவிட்டார்). அந்த சூழ்நிலை அதற்கு ஒத்துவராததால் அது இறந்துவிட்டது. நல்ல முறையில் நாய் வளர்க்க முடியும் என்றால் அந்த காரியத்தில் இறங்குங்கள். இல்லாவிட்டால் நாய் வளர்க்கும் ஆசையைவிட்டு விடுங்கள். அந்த பாவம் உங்களுக்கு வேண்டாம். காவலுக்காக வளர்க்கப்படும் ஒர் செல்லப் பிராணி மீது அன்பு காட்டுங்கள்.

வளர்ப்பு பிராணிகள் மீது அன்பு காட்ட தெரியாத சமுதாயம் பண்பட்ட சமுதாயமாக இருக்க முடியாது. அதனால் தான் இன்றய சமுதாயத்தில் மனித நேயம் குறைந்து வன்முறை பெருகி வருகிறது. இதை பன்னாட்டு சமுதாயம் உணரவேண்டும்.


வெறிநாய்கடி