click here for more details
காச நோய் (TB)
மனித உயிர்களை குடிக்கும் கொடிய நோய்களில் காச நோயும் ஒன்றாகும். இதற்கு சயரோகம், எலும்புருக்கி நோய் போன்ற வேறு பெயர்களும் உண்டு.
இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 2 நபர்களுக்கு சளியில் கிருமியுள்ள காச நோய் ஏற்படுகிறது. ஒரு நோயாளி ஒரு வருடத்தில் சுமார் 10 முதல் 15 நபர்களுக்கு இந்த நோயைப பரப்ப முடியும்.
காச நோய் என்றால் என்ன?
காச நோய் கிருமிகளால் பரவும் ஒரு தொற்று நோய்.
இது பெரும்பாலும் நுரையீரலை தாக்குகிறது
இது மூளை, நிணநீர் சுரப்பி, எலும்புகள், சிறுநீரகம், வயிறு போன்ற மற்ற உருப்புகளையும் பாதிக்கும்.
காச நோய் எவ்வாறு ஏற்படுகிறது?
காசநோய் கிருமிகள் காற்றின் மூலம் பரவுகிறது.
காசநோய்யின் அறிகுறிகள் என்ன?
2-3 வாரத்தில் சளியுடன் இருமல்
இரும்பும் போது சளியுடன் இரத்தம்
மாலை நேர காய்ச்சல்
எடை குறைதல்
நெஞ்சு வலி
பசியின்மை
காசநோயை கண்டறிவது எப்படி?
சளி பரிசோதனை - சளியில் கிருமிகள்
அவசியானால் மார்பு எக்ஸ்-ரே எடுக்கலாம்
காசநோய்க்கான சிகிச்சை:
காச நோயை பூரணமாக குணப்படுத்த முடியும்.
6 முதல் 8 மாதங்கள் சிகிச்சை
டாட்ஸ் என்கிற நேரடி குறுகிய கால சிகிச்சை முறையே சிறந்தது
அரசங்க மருத்துவமனைகளில் தரமான மருந்துகள் இலவசமாக கிடைக்கிறது.
மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய தேவை இல்லை.
உங்கள் பொறுப்பு:
சிகிச்சையை குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து எடுக்க வேண்டும்.
சிகிச்சை ஆரம்பித்த சில நாட்களிலேயே நோயின் அறிகுறிகள் மறைந்தாலும் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும்.
சிகிச்சையை போதிய காலத்திற்கு முன்பாக நிறுத்தவோ அல்லது தவிற்பதோ கூடாது.
சிகிச்சை காலத்தில் ஏற்படும் உடல்நலக் குறைவுகளை உடனே மருத்துரிடம் தெரிவிக்கவும்.
குறிப்பிட்ட காலங்களில் சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நோய் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
கண்ட இடங்களில் சளியைத் துப்பக்கூடாது
இரும்பும் போது வாயை துணியால் மூடிக்கொள்ளவும்
சளியை மூடியுள்ள குப்பில் துப்பி எரித்துவிட வேண்டும்.
"உயிரைக் குடிக்கும் காசநோயை தடுத்திடுவோம். மனித இனத்தைக் குறைக்கும் சயரோகத்தை ஒழித்திடுவோம் மனித உடலை உருக்கும் எலும்புருக்கி நோயை உருத்தெரியாமல் அழித்திடுவோம்"
நன்றி: மாவட்ட காச நோய் தடுப்பு சங்கம், சேலம்.