தொழுநோய் என்றால் என்ன?
தொழு நோய் ஒரு வகை கிருமியால் வருகிறது. காற்றின் மூலம் பரவுகிறது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் இனப்பெருக்கத்திற்கு பின் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அது முக்கியமாக தோலையும், நரம்புக்களையும் பாதிக்கிறது. அதனால் மூக்கு சப்பையாகி, காதுமடல் தடித்து, கைவிரல்கள், கால்விரல்கள் மடங்கி போய் குறைந்து போதல் போன்ற ஊனங்கள் ஏற்பட்டு சொரூபிகள், அரூப உருவங்கள் கொண்டவர்களாகி விடுவார்கள். தகுந்த தோல் நோய் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று மருந்து கட்டுப்பாட்டிலேயே குணப்படுத்திவிடலாம்.
தொழுநோய் வேறு எந்த பெயரால் அழைக்கிறார்கள்?
குஷ்டநோய், பெருவியாதி, மேகநீர், மேக வியாதி என்றும், லெப்ரசி, ஹேன்சன் (விஞ்ஞானியின் பெயர்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
தெழுநோய் வர காணம் என்ன?
"மைக்கோபேக்டீரிம்" என்ற கிருமி அல்லது தொழு நோய் கிருமி (இந்தகிருமியைக் கண்டு பிடித்தவர் (ஹேன்சன் என்ற விஞ்ஞனி). காற்றின் மூலம் பரவுகிறது. சிகிச்சை எடுக்காத நோயாளி தும்பும் போதும் இரும்பும் போதும் கோடிக்கணக்கான தொழுநோய் கிருமிகள் காற்றில் பரவுகிறது
தொழுநோயின் வகைகள், அறிகுறிகள் யாவை?
பரவும் வகையின் அறிகுறிகள்:
புருவ முடிகள் உதிர்ந்து போகுதல்
எண்ணெய் பூசியது போன்ற பளபளப்பான மினுமினுப்பான தோல் தோற்றம்
காதின் பின் பகுதி (மடல்) லேசாக தடித்து இருத்தல்
குதிக்காலில் பரிய வெடிப்பு பின்பக்கமாக கணுக்காலை நோக்கி இருத்தல்
பரவாத வகையின் அறிகுறிகள்:
அரிப்பு இல்லாத சிவந்த அல்லது சற்று வெளிறிய உணர்ச்சி அற்ற தேமல்கள்
கை, கால்களில் மதமதப்பு (உணர்ச்சி குறைந்து இருத்தல்)
தொழுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் யாவர்?
ஐந்து தேமலுக்கு மேல் உள்ளவர்களுக்கும், பரவும் வகை பாதிப்புகள் உள்ளவர்களும்
நரம்புக்கள் பாதிக்கப்பட்டவர்கள்
முகத்தில் தேமல் உள்ளவர்கள்
ரீஆக்ஷனுக்கு (reaction) உட்படுபவர்கள்
கர்பிணிகள்
தொழுநோய் ஊனங்கள் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள் யாவை?
கண் இமைகள் மூடுவதில் சிரமம்
செய்யும் வேலைகளில் விரல்களின் பலமிழந்த நிலை
காலில் செருப்பு பிடிப்பில்லாமல் தானாக கழன்று விடுதல்
தொழுநோயால் ஏற்படடும் ஊனங்கள் என்ன?
முகம்: மூக்கு சப்பையாகுதல், கண் இமைகள் மூடமுடியாத நிலை
கை: விரல்கள் மடங்கிப்போதல், விரல்கள் குறைந்து போகுதல், மணிக்கட்டு துவண்டுவிடுதல்
கால்:விரல்கள் மடங்கி போதல், விரல்கள் மழுங்கி விடுதல், பாதம் துவண்டு விடுதல், பாதத்தில் உணர்ச்சி போய் குழிப்புண்கள் ஏற்படுதல்.
தொழுநோய் ஊனங்கள் சரிசெய்ய இயலுமா?
இயலும்.
ஆம் எனில் என்ன முறை?
சில ஊனங்கள் பிஸியோதெரப்பி மூலம் சரி செய்யலாம், சில ஊனங்களை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
தொழுநோய் பூரண குணமடையுமா?
குணமடையும் (தொழுநோய்க் கிருமிகள் முழுவதும் மருந்தின் மூலம் கொல்லப்படுகிறது, எனவே எந்த நிலையிலும் குணமாகும்)
தொழுநோய் யார் யாருக்கு வரும்?
தொழுநோய்கிருமிகளை எதிர்க்க கூடிய சக்தி இல்லாத எவருக்கும் தொழுநோய் வரும்.
தொழுநோய்க்கிருமிகள் காற்றின் மூலம் பரவுகிறது. நோய்கிருமிகளை ஒவ்வொருவரும் சுவாசம் மூலம் பெரும் வாய்ப்புள்ளது. இருப்பினும் நோய் எதிர்ப்பு சக்தி 100க்கு 98 பேருக்கு இயற்கையாகவே உள்ளது. தடுப்பு மருந்து இல்லை.
சிகிச்சை
தொழுநோய்க்கு சிகிச்சை தற்போது அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படுகிறது.
பரிசோதனை: அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பரிசோதனை செய்யப்படுகிறது.
நாங்கள் உங்களுக்கு கொடுத்து இருக்கும் இச்செய்தியை நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தி, வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பதே நலம் என்பதை மனதில் கொண்டு "தொழுநோய் ஒழிப்புத்திட்டத்தை தீவிரமாக்கி தொழுநோய் இல்லாத உலகை உருவாக்குவோம்" என்று உறுதி பூண்டு செயல்படுவோம்.