கீல்வாதம்
கீல்வாதம் என்றால் என்ன?
எங்கெல்லாம் இரண்டு எலும்புகள் இணைகின்றனவோ, அந்த இணையும் இடம் மூட்டு எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மூட்டின் இணைப்புகளையும் மூடி இருக்கும் ரப்பர் போன்ற அமைப்பு குருத்தெலும்பு (CARTILAGE) என அழைக்கப்படுகிறது. இது குஷன் (CUSHION) ஆகவும் அதிர்ச்சியைத் தாங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் உங்கள் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி தேயாமலும், சேதமடையாமலும் பாதுகாக்கிறது. இந்த குருத்தெலும்பு ஸினோவியல் திரவம் (SINOVIAL FLUID) எனும் பசைபோன்ற திரவத்தால் மசகுத்தன்மை அடைகிறது. இந்த திரவம் மூட்டுக்கள் இதமாய் இயங்க உதவுகிறது. கீல்வாதத்தின்போது, மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பில் தேய்வு ஏற்படுகிறது. இணக்கத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். ஆரோக்கியமான குருத்தெலும்பைப்போல் அல்லாமல் தேய்ந்து வரும் குருத்தெலும்பு "உலர்ந்த" நிலையை அடைவதோடு, அதனால் வலியும், வீக்கமும் உண்டாகிறது.
கீழ்வாதத்தின் அடிப்படைக் காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால், உடல் எடை அதிகரிப்பு போன்ற மரபியல் பிரச்சினைகள் காரணமாக, அதிக எடை குருத்தெலும்பு திசுக்களுக்கு அழுத்தப் பாதிப்பைத் தருவதால் கீல்வாதப் பாதிப்பு அதிகாரிக்கிறது.
கில்வாதம் உங்களை எப்படி பாதிக்கிறது?
கீல்வாதம், எடையைத் தாங்கும் உங்கள் உடல் உறுப்புகளான மூட்டுகளில் இடுப்பு, முழங்கால்கள் மற்றும் முதுகெலும்பை முக்கியமாகப் பாதிக்கிறது. பெண்களுக்கு கைகளையும் பாதிக்கலாம். குறிப்பாக, விரல்களின் மூட்டுக்களையும், கட்டைவிரல் அடிப்பகுதியையும் பாதிக்கலாம்.
உங்கள் முக்கியமான பிரச்சனை எதுவெனில் வலிதான். பாதிக்கப்பட்ட மூட்டில் சாதாரண வலியில் இருந்து தாங்க முடியாத வலி வரை பலவிதமாக வலி ஏற்படலாம் அதிகமாக செயல்படும் போது நீங்கள் தாங்க முடியாத வலியால் பாதிக்கப்படலாம் என்பதோடு, நீங்கள் நடக்க முடியாத நிலையும் ஏற்படலாம். சில சமயங்களில், பாதிக்கப்பட்ட மூட்டில் வீக்கம் ஏற்படும். காலையில் எழுந்திருக்கும் போது மூட்டுகளில் விறைப்புத் தன்மையையும், சில சமயங்களில் லேசான வலியையும் நீங்கள் உணரலாம். தூக்கத்தின்போது நீண்டநேரம் மூட்டு இயங்காததால், பின்பு காலையில் ஏற்படும் இந்நிலை சில நிமிடங்களில் சாரியாகி, சாதாரண நிலைக்கு வந்துவிடும். இந்த நோயின் பாதிப்பு கூடும்போது, வலிகள், விறைப்பு உணர்வு போன்றவை ஒரு நாளில் பல முறைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
கீல்வாதத்தை சமாளித்து வாழும் விதம்
கீல்வாதத்தை சமாளித்து கட்டுப்பாட்டுடன் வாழும் விதம், மருந்துகளை சரிவர சாப்பிடுவதோடு மட்டுமின்றி, அதற்கும் அப்பாற்பட்டது. உங்கள் டாக்டர் மருந்துகளை சாரிவர கலந்து சாப்பிடுவது, உடற்பயிற்சி வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பலவற்றைப் பற்றிய ஒருங்கிணைந்த திட்டத்தை மேற்கொள்ள ஆலோசனை அளிப்பார். அந்த திட்டமானது பின்வருமாறு இருக்கும்.
வலியையும் அசெளகாரியத்தையும் குறைப்பது.
செயல்பட இயலாத நிலைமையை குறைப்பது அல்லது தடுப்பது.
உங்கள் வழக்கமான பணிகளை முடிந்தவரை சுதந்திரமாகச் செய்ய உதவுவது.
மெதுவாகவும், எதிர்பாராத விதத்திலும் கீல்வாதப் பிரச்சினை பாதிப்பது போல, சிகிச்சையும் மிக மெதுவாகவே நிவாரணம் தரும். எனவே, கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளியான நீங்கள் பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். உங்கள் சிகிச்சைத் திட்டத்தை சாரிவர மேற்கொள்ளுங்கள் நல்ல பலன்களை விரைவில் காண்பீர்கள்.
மருந்துகள்
வலியிலிருந்து நிவாரணம் பெறவும் இயல்பான நல்ல நிலையைப் பெறவும் மருந்துகள் மிக உதவிகரமாக இருக்கும். மூட்டுகள் பிரச்சினையின்றி இதமாக இயங்கவும் மருந்துகள் உதவும். மருந்துகள் இருவிதங்களில் செயல்படுகின்றன. ஒரு விதத்தில் வலி உணர்விலிருந்து நிவாரணம் தந்து நோயாளிக்கு நிம்மதி தருகின்றன. இன்னொரு விதத்தில், மூட்டுதிசுக்களில் வீக்கம் காரணமாக ஏற்படும் மாற்றங்களைக் குறைத்து, மூட்டின் இயக்கத்தை சீர்செய்வதோடு, வலி உணர்வு மேலும் தோன்றாமல் தடுக்கின்றன. வலியிலிருந்து நிவாரணம் தரும் செயல்திறன் அனால்ஜெசியா என்றும், வீக்கத்தை கட்டுப்படுத்தும் செயல்திறன் வீக்க-தடுப்பு விளைவு என்றும் அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் அனேகமாக ஒரே நேரத்தில் செயல்படுகின்றன. இந்த மருந்துகளால் பொதுவாக ஏற்படும் பக்கவிளைவு வயிற்றில் எரிச்சல் உணர்வு தோன்றவது ஆகும். பல புதிய மருந்துகள், வயிற்றுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த மருந்துகள் எல்லாம் உங்கள் கீல்வாத பாதிப்புகளை குறைக்க உதவினாலும் உங்களுக்கு ஏற்ற மருந்து எது என கண்டறிய நாட்களாகும். எனவே, நீங்கள் எந்த மருந்தை சாப்பிட வேண்டும். என தீர்மானிப்பதில் உங்கள் டாக்டரே தகுந்த வழி காட்டுவார்.
உடற்பயிற்சி
கீவாதத்தை சமாளிக்க உடற்பயிற்சி மற்றும் ஓய்வு இரண்டும் முக்கிய அம்சங்கள். சாரியான முறையில் இரண்டையும் செயல் படுத்தினால், உங்கள் மூட்டுகளுக்கு அவை பொரிதும் உதவும். உடற்பயிற்சியால் இரண்டு பலன் உண்டு. முதலாவதாக மூட்டுகள் ஒரே நிலையில் "இறுகி" விடாமல் தடுப்பதோடு, அவைகளின் இயக்கத்தில் இது உதவுகிறது. இரண்டாவதாக, மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தி, மூட்டுகளுக்கு ஆதரவாயும், வலிமையையும் வழங்குகிறது. எனவே வலி குறைவதோடு, நீங்கள் செய்யும் பணிகளை சுலபமாய் செய்ய உதவுகிறது. தொடர்ச்சியாக செய்யும் ஓர் உடற்பயிற்சி திட்டம் உங்களை முடிந்தவரை சறுசுறுப்பாக வைத்திருப்பதோடு உங்களின் அன்றாட நடவடிக்கைகளை வீட்டிலும், வேலைப் பார்க்குமிடத்திலும் எளிதாக செய்ய உதவுகிறது. டாக்டர்/ உடற்பயிற்சி நிபுணர் ஆலோசனை மற்றும் கண்காணிப்பின் கீழ் உடற்பயிற்சி முறை ஒன்றைத் தொடங்கவும்.
ஓய்வு
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது போலவே, தொடர்ந்து நன்கு ஓய்வு எடுத்தலும் அவசியம். இது உங்கள் தசைகளுக்கு ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுகிறது. சரிவர உடற்பயிற்சி செய்தால், உங்கள் ஷர்ட் பட்டன் போடுவது முதல் படிகளில் ஏறி இறங்குவது வரை எல்லா செயல்களுமே சுலபமாக ஆகிவிடும்.
கீல்வாத பாதிப்பில் உணவு முறை
கீல்வாதப் பாதிப்பில், உடற்பயிற்சியைப் போலவே உணவுக் கட்டுப்பாடும் முக்கியம். சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்து மற்றும் அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் இவற்றை மிக குறைவாகவே உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். உங்கள் உணவில் தானியங்கள், பருப்பு வகைகள், புத்தம்புது பழங்கள் மற்றும் காய்கறிகள் இடம்பெற வேண்டும். நினைவிருக்கட்டும், ஆரோக்கியமான உணவுமுறை நோய் எதிர்ப்புச்சக்தியை ஊக்குவிக்கிறது என்பது. இந்த "உபரி சக்தி" நோயை எதிர்த்திட அவசியமாகிறது. உங்கள் முழங்கால்கள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் அழுத்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை மறவாதீர்கள். எனவே உங்கள் உணவுக் கட்டுப்பாட்டை சாரியனபடி தொடருங்கள்.
கூடுதல் விவரங்களுக்கு எழுதுக:
·புல்போர்டு (இந்தியா) லிமிடெட்
ஆக்ஸ்போர்டு ஹவுஸ் பந்தர்
மும்பை - 400 001