உணவு உண்டவுடன் செய்ய கூடாதவை
புகைப்பிடிக்காதீர்கள் - உணவு உண்டவுடன் புகைப்பிடிப்பது 10 மடங்கு புகைப்பிடிப்பதற்கு ஒப்பானது. (புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்)
உடனே பழங்களைச்சாப்பிடாதீர்கள் - பழங்களை உடனே சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும். சாப்பிட்டு 1-2 மணி நேரம் கழித்து பழங்கள் சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.
டீ குடிக்காதீர்கள் - சாப்பிடவுடன் டீ குடிக்காதீர்கள். டீயில் உள்ள அமிலத்தன்மை நாம் உண்ண உணவில் உள்ள புரத பொருளை கடின பொருளாக மாற்றிவிடும், அதனால் ஜீரணம் செய்வது கடினம்.
பெல்டை உடனே தளர்த்த வேண்டாம் - சாப்பிடவுடன் பெல்டை தளர்த்துவதால் சிறுங்குடல் அடைபடவோ அல்லது முறுக்கிக் கொள்ளவோ சந்தர்ப்பம் உள்ளது.
நடைப்பயிற்சி கூடாது - சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஜீரண உறுப்புக்களால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக் கொள்ள முடியாது.
குளிக்க வேண்டாம் - சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்றுவிடுவதால் ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. நாளைடைவில் ஜீரண உறுப்புக்கள் வழுவிழந்துவிடும்.
தூங்க வேண்டாம் - உண்டவுடன் படுக்கைக்கு செல்ல வேண்டாம். நாம் உண்ட உணவு சரியானமுறையில் செரிமானமாகாது.