தெரிந்து கொள்ளுங்கள்

  1. இதய நோய் அறிய ஒரு துளி இரத்தம் போதும்.

  2. இதயம் துடிக்கும் போது ஏற்படும் அழுத்தத்தைக் கொண்டு 30 அடி தூரத்திற்கு இரத்தத்தைப் பீய்ச்சி அடிக்கலாம்.

  3. இரத்தத்தில் உப்பு குறைந்தால் வயிற்றுச் சதை பிடித்து வலி ஏற்படும். இரத்த அழுத்தம் குறையும். இரத்தத்தில் கழிவு பொருள்களின் அளவு அதிகரிக்கும், இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயலிழந்து விடுகின்றன.

  4. விக்கலை நிறுத்த ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் போகும். விக்கலுக்கு மருந்து, மாத்திரை சாப்பிடத் தேவையில்லை.

  5. நமது உடலிலேயே மிகவும் வலிமை மிகுந்த தசையை நாக்கு தான் பெற்றிருக்கிறது.

  6. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான பாக்டரியாக்கள் நம் வாயில் உள்ளன.

  7. நம் உடலிலேயே மிகவும் உறுதி வாய்ந்த உறுப்பு நமது பற்களின் மேற்புறம் உள்ள எனாமல் (Enamel) என்ற பற்கூடு ஆகும்.

  8. நமது உடலிலே மிகுந்த பரப்பளவை உடைய, பெரிய உறுப்பு தோல்.

  9. காப்பி அருந்துவது பல் சொத்தையைத் தவிர்க்கும். காப்பியில் க·ப்பீயின் (Caffeine) என்ற உற்சாகப் பொருள் இருப்பது அனைவருக்கும் தொ¢ந்த ஒன்று. காப்பியில் உள்ள பொருள்களில் டிரைகொனெல்லன் Triconelline என்ற ஒரு கசப்பான பொருளும் உள்ளது. காப்பியின் கசப்புக்கு இது தான் காரணம். இப் பொருளைக் கண்டால் வாய் மற்றும் பற்களில் வளரும் சொத்தை உண்டாக்கும் பாக்டரியாவுக்கு சிம்ம சொப்பனம். எனவே காப்பியை பால் கலக்காமல் (Black Coffee) மிதமான அளவில் அருந்துவது பல் சொத்தையை உண்டாக்கும் பாக்டரியாவின் Strepto coccus mutans வளர்ச்சியைத் தடுக்கிறது என்று கார்லா ப்ருஸ்ஸோ என்னும் அறிஞர் கூறுகிறார். (Carla Pruzzo University of Anncone, Italy)

  10. ஒரு மனிதனின் மூக்கு 10,000 வகையான வாசனைகளின் வேறுபாட்டை உணரும் ஆற்றல் கொண்டது.

Rtn. Dr. S. முரளி, M.D.S.,