நுரையீரல் பாதுகாப்பு

நுரையீரல் நோயுள்ளவர்களுக்கு எளிதில் சுவாசத்தில் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புண்டு.  தொற்று நோயினால் நுரையீரல் மேலும் பாதிக்கப்பட்டு, நுரையீரலால் சரிவர வேரை செய்ய முடியாமல் பேகலாம்.  இக்காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.

தொற்று நோயின் அறிகுறிகள: நுரையீரல் தொற்று எளிதில் வரலாம். தீவிரமான பிரச்சனையை உண்டாக்கலாம்.  எனவே, உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது முக்கியமானது.  கீழக்கண்ட அறிகுறிகளைக் கண்டால் உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தடுப்பு

கைகளை அடிக்கடி கழுவுங்கள், தொற்றுநோயை உண்டாக்கும் கிருமிகள் பொதுவாக, கை தொடுவதால் பரவுகின்றன.

மழை, குளிர் காலங்களில் குறிப்பாக, அதிக மானவர்களுக்கு ஜலதோஷமும், ஃபுளுவும் இருக்கும்போது கும்பலோடு தொடர்பு கொள்வதைத் தவிருங்கள்.

சிகிச்சை

Dr.ராஜேந்திரன்,
சென்னை

காற்று மாசால் நுரையீரல் வளர்ச்சி குறையும்!

மாசுபட்ட காற்றைச் சுவாசித்தே வளரும் குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சி பாதிக்கப்பட்டு குன்றிப் போகிறது என்கிறது இங்கிலாந்து மருத்துவ ஏடு.  கலிபோர்னியாவில் 1759 குழந்தைகளிடம் மேற் கொண்ட எட்டு ஆண்டு கால ஆய்வின் கண்டுபிடிப்பு இது.  குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சி 10வது வயதிலிருந்து 18 வயது வரை கண்காணிக்கப்பட்டது.  மாசு பட்ட காற்றைச் சுவாசித்த குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சி 20 சதவீதம் குறைவாகவே உள்ளது.

குறைவான மாசைச் சுவாசித்த குழந்தைகளுக்குப் பாதிப்பு வெறும் 1.6 சதவீதம் மட்டுமே.  புகைப் பழக்கமோ, ஆஸ்மா போன்ற சுவாசப் பாதை நோயில்லாதவர்களிடமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  பரந்த வான்வெளியை மாசுபடுத்தியபின் நல்ல காற்றை எப்படி சுவாசிப்பது?

மாசுபட்ட காற்றைச் சுவாசிக்கும் குழந்தைகள் நுரையீரலின் திறன் ஆண்டுக்கு ஒரு சதவீதம் குறைந்து போகிறது.  வயது அதிகரிக்கும்போது இந்த நுரையீரல் குறை உயிருக்கே ஆபத்தாகிப் போகிறது.  முதுமையில் உண்டாகும் இதய நோயும், சுவாசப்பாதை நோய்களும் அதிக வீரியத்துடன் தாக்குகின்றன.  வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் நல்ல தண்ணீரை, நல்ல காற்றை, நல்ல உணவை இழந்து வருகிறோம்.  பாட்டில் தண்ணீருடனும், முகமூடி ஆக்சிஜனுடனும், கணக்கற்ற மாத்திரைகளுடனும் வாழ்வதுதான் முன்னேற்றமா?