சிக்குன் குன்யா (Chikungunya)

 து ஒரு அரிதான ஆல்ஃபா வைரஸ் என்னும் நுண்கிருமியால் (தன் குணாதிசியங்களை மாற்ற தக்க தன்மையுடைய நுண்நோய்க்கிருமி) உண்டாகும் ஒரு வித விஷக்காய்ச்சல். கொசு (டைகர் கொசு) கடிப்பதால் பரவுகிறது. இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல பகுதிகளிலும் நடந்தவண்ணம் உள்ளன. இந்துமகா சமுத்திரம் மற்றும் மத்தியதரைகடல் நாடுகளின் கடலோரப்பகுதிகளில் இந்த விஷக்காய்ச்சல் காணப்படுகிறது.

 இது ஓர் உயிர்கொல்லி நோய்யைச்சார்ந்தது அல்ல, எனினும் 2005-06ம் ஆண்டுகளில் ஏற்பட்ட 200 இறப்புகள் இதனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

அறிகுறி:- காய்ச்சல் (102.2°F) உண்டாகும், மூட்டுவலியும், ஒரு சிலருக்கு வெளிச்சத்தைப் பார்ப்பதில் தடுமாற்றமும் உண்டாகும். காய்ச்சல் ஒரிரு நாட்களில் குறைந்துவிடும். மூட்டுவலி ஒரு வாரத்தில் குணமடையலாம். ஒரு சிலருக்கு இது மாறுபடும்.

சிகிச்சை:- இதற்கு வரையறுக்கப்பட்ட சிகிச்சை என்று எதுவும் கிடையாது. வழக்கமான சிகிச்சையுடன் குளோரோகுயூன்  (chloroquine) கொடுக்கப்படும். அதிகம் நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். சுய சிகிச்சை கூடாது. உடனே மருத்துவரை அணுக வேண்டும். இதமான மூட்டு பயிற்சியும் தேவைப்படும். ஒரு சிலருக்கு நரம்பு மண்டலமும் பதிக்கப்பட்டுள்ளதாக சமிபத்தில் மருத்துவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்கள்.

தடுக்கும் முறை:- தற்பொழுது இதற்கு தடுப்பூசி (vaccine) கிடையாது. இருப்பிடத்தைச் சுற்றி உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சாக்கடை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு மருந்து தெளிக்க வேண்டும். கிணற்றில் கொசு முட்டைகளை உண்ணும் மீன்களை விடலாம். தூங்கும் போது கொசு வலையைப் பயன்படுத்த வேண்டும்.