எய்ட்ஸ்

எய்ட்ஸ் என்றால் என்ன?
மற்றவரிடம் இருந்து பெற்ற எச்.ஐ.வி என்கிற நுண்கிருமி மனிதனின் உடலுக்குள் இரத்தத்தின் மூலம் சென்று உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயை உண்டாக்கிறது.
இவைகளால் எய்ட்ஸ் பரவும் இவைகளால் எய்ட்ஸ் பரவாது

 • எய்ட்ஸ் கிருமி கொண்டோருடன் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வதன் மூலம்.
 • எய்ட்ஸ் பரிசோதனை செய்யாத இரத்தத்தை செலுத்துவதன் மூலம்
 • கொதிக்கிற நீரில் சுத்தகரிக்கப்படாத ஊசி, கத்தி, பிளேடு மற்றும் பிறவற்றைக் கொண்டு சவரம் செய்தல், மொட்டை அடித்தல், காது குத்தல் மற்றும் பச்சைக் குத்திக் கொள்வதன் மூலம்
 • எய்ட்ஸ் கொண்ட கர்ப்பிணிப் பெண்ணிடம் இருந்து அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கும் வரலாம், அவளால் கொடுக்கும் தாய்ப்பால் மூலம் சேய்க்கும் பரவலாம்.

எய்ட்ஸ் கிருமி உள்ளவருடன்

 • வீட்டில் ஒன்றாகப் பழகுவதன் மூலம்
 • வேலை செய்யும் இடத்தில் ஒன்றாகப் பழகுவதன் மூலம்
 • தட்டு, தம்ளர், ஸ்பூன் அகியவற்றை சேர்த்து உபயோகிப்பதால்
 • உணவு, தண்ணீர் பகிர்ந்து கொள்வதால்
 • அவர்கள் உபயோகிக்கும் கழிவறை, அல்லது குளியல் தெட்டியை பயன்படுத்துவதன் மூலம்
 • முத்தம் இட்டுக் கொண்டால், இரும்பல் மற்றும் தும்பல் தெறித்தது விட்டால்
 • நோய்யினால் பாதிக்கப்பட்டவருடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம், கை குலுக்குவதன் மூலம்
 • நோயாளியைக் கடித்த கொசு, மூட்டைப் பூச்சி உங்களை கடித்துவிட்டால்
 • கண்ணீர், உமிழ் நீர் அல்லது வியர்வை உங்கள் மேல் படுவதால்
 • எய்ட்ஸ் கிருமி உள்ளவரின் சிறுநீர், மலத்தை மிதித்து விட்டால்

எய்ட்ஸ் தெரிந்து கொள்ள வழி: இரத்த பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எய்ட்ஸ் நோய்யின் அறிகுறிகள்: எச்.ஐ.வி நுண்கிருமியால் உடல் பலமற்றதாகி விட்ட நிலையில் ஏற்படுகின்ற நோய்யின் பிரதிபலிப்பு தான் எய்ட்ஸ் ஆகும்.

 1. தொடர்ந்து சளி, இரும்பல், காய்ச்சல் வரும்

 2. தொடர்ந்து வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்போக்கு இருக்கும்

 3. தோலில் தடிப்பு ஏற்படும்

 4. எப்பொழுதும் அசதியாகவும், களைப்பாகவும் இருக்கும்

 5. நாளடைவில் எடை குறைந்து கொண்டே போகும்

  எய்ட்ஸ் வந்து விட்டால்: மனம் தளராதீர்கள், தன்னம்பிக்ககையை வளர்த்துக் கொள்ளுங்கள், அமைதியாக வாழ பழகிக் கொள்ளுங்கள், மிகுந்த ஓய்வு எடுங்கள் சத்துள்ள கீழ் கண்ட உணவை உண்ணுங்கள்.

உடலை வளர்க்கும் உணவுகள்: பட்டாணி, மொச்சை, சோயா, வேர்கடலை, எல்ல பழங்கள், கீரை, காய்கறிகள், முட்டை, இறைச்சி, மீன், பால்.

சக்தியளிக்கும் உணவுகள்: உருளைக் கிழங்கு, அரிசி, தானியம், மக்காச்சோளம், ரொட்டி, கிழங்கு, வாழைப்பழம் முதலியன.


எய்ட்ஸ்க்கு சிகிச்சை உண்டா? இல்லையா?